யாழில் வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள்

வாள்வெட்டுச் சம்பவங்கள்

யாழில் வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் திங்கட்கிழமை (15) இரவு இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும், மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]