யாழில் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதலில் 53 வயதான நபரொருவர் காயம்- வேன், முச்சக்கரவண்டி தீக்கரை வீடியோ உள்ளே

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்திய, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஹயேஸ் வாகனம் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது, இனந்தெரியாத கும்பல் நேற்றிரவு நடத்திய பெற்றோல் குண்டுத்தாக்குதலில், ஹயேஸ் வாகனமும் முச்சக்கரவண்டியும், முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் காயமுற்ற 53 வயதான செல்லத்துரை செல்வரஞ்சன் என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் யாழ் நகரத்தை அண்டிய பிரதேசத்திலும் இதே பாணியில் பெற்றோல் குண்டு வீசப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியொன்று தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]