யாழில் விழிப்புணர்வு நடவடிக்கை

இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மற்றும் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை கடந்த சில தினங்களாக யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று இறுதிநாளான இன்று யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

2016 இல 01 மாகாண உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்தச்சட்டம் இனை தொடர்ந்து பெண்களுக்கு கிடைக்கப்பற்ற அரசியல் உரிமைகளை செயற்படுத்தும் நோக்குடன் குறித்த விழிப்புணர்வை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.