யாழில் வயோதிபத் தம்பதிகளுக்கு நடந்த கொடூரம்!!

யாழ் கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை கடுமையாகத் தாக்கி, அங்கிருந்து நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையர்கள் வீட்டின் புகைக்கூடு வழியே உட்புகுந்ததுடன் வீட்டில் இருந்த வயோதிபத் தம்பதிகளை கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிய பின் அறிந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியின் காதை அறுத்து தோட்டை எடுத்ததுடன் தொலைபேசிகள் மற்றும் பத்தாயிரம் ரூபா அளவிலான பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கோப்பாய் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.