யாழில் மீண்டும்மொரு வித்தியாவா?? யாழில் பதற்றம் பாடசாலை மாணவியின் சீருடை, பாதணி மீட்பு

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளதாக தெரியவருகின்றது.

இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றனவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸயார் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய சோக்கோ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளாரா? அல்லது வேறெதும் சம்பவங்கள் இடம்பெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]