யாழில் மினி சூறாவளி- மக்களின் வீடுகள் சேதம் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

யாழில் வீசிய மினி சூறாவளி காரணமாகயாழில் மினி சூறாவளிமாகியுள்ளன.

யாழ்குடாநாட்டில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது.
வழக்கத்திற்குமாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் மழைப்பொழிவும் கனமாக காணப்பட்டது

மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த மினி சீறாவளி காற்றுடன் கூடிய மழையினால் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமாகியுள்ளது

காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப்பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியுள்ளதுடன் நான்கு வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு பகுதியளவில் சேதமாகியுள்ளது

அத்துடன் பொன்னாலை குடியிருப்பு பகுதியிலுள்ள மூன்று வீடுகள் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக சேதாரமாகியுள்ளதுடன் இப்பகுதியிலுள்ள மரங்களும் காற்றின் காரணமாக முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]