முகப்பு News Local News யாழில் மாவா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றல்

யாழில் மாவா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றல்

யாழில் மாவா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றல்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டதுடன், மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது..

இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டள்ளன.

இதன்போது, விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறப்பு பொலிஸ் பிரிவினரால் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள கேக் விற்பனை நிலையம் இன்று (20) முற்றுகையிடப்பட்டள்ளது.

சந்தேகநபர் யாழப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரிடம் மீட்கப்பட்ட மாவா போதைப் பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, ஐந்து சந்தி கேக் விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியும் கடந்த 7ஆம் திகதியும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட போது, பெருமளவு மாவா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதனைத் தயாரிக்கும் மூலப்பொருள்களும் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com