யாழில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் விளக்கமறியலில்

துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்

யாழில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தனியார் பள்ளியின் ஆசிரியறொருவர் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததின் குற்றச்சாட்டினால் பொலிஸார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாது அங்கு கல்விபயிலும் மாணவிகளை தனியார் வகுப்பிற்கு கட்டாயப்படுத்தி வரவழைத்ததுடன், அவர்களில் சிலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சங்கானை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். பாதிப்படைந்த மூன்று மாணவிகளிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.

அவரைக் கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மல்லாகம் நீதிமன்ற நீதிவான் கைது செய்யப்பட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]