யாழில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பரிதாப பலி- வீடியோ உள்ளே

யாழ்.மல்லாகம் சந்தியில் பொலிஸாரின் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சூட்டுச் சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் சகாயமாதா கோவில் பெருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (17)நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த 4534 என்ற இலக்கமுடைய பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் பகுதியில் வைத்தே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]