யாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்

யாழ் கைதடிப் பகுதியில் யுவதி ஒருவர் வீதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த இனந்தெரியாதவர்களால் இன்று கடத்தப்பட்டார்.

அதனை அவதானித்த வயதான ஒருவர் குறித்த ஆட்டோவை துரத்திச் சென்ற போது ஆட்டோவில் இருந்தவர்களால் யுவதி அணிந்திருந்த ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

திருநெல்வேலி மருத்துவபீடத்துக்கு அருகில் குறித்த ஆடைகள் கழற்றி வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தும் பொலிசார் அப்பகுதிக்கு வருவதற்கு தாமதமாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]