யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு

யாழில் பிரதேச ஊடகவியலாளர்

யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை 4.30 மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ராஜேந்திரன் (வயது 56) என்பவர் மீதே வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

யாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழில் இருந்து இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை பத்திரிகை நிறுவனமான காலை;கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான இவர் இன்று அதிகாலை 4.30 கொழும்புத்துறை துண்டிப் பகுதிக்கு பத்திரிகை விநியோகிப்பதற்காக வந்துள்ளார்

இதன்போது, 5 மோட்டார் சைக்கிளில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் வந்து கோடரி மற்றும் வாள்களினால் சாரமாறியாக வெட்டியுள்ளனர். அதன்போது உயிருடன் விட்டால் தப்பு என்றும் வயரினாலும் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்தில் இருந்து கத்திய போது, வாள்வெட்டுக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர் 3 பிள்ளைகளின் தந்தையார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]