யாழில் பிரதமர் சென்ற ஹோட்டலின் வெளிப்புறத்தில் இனந்தெரியாதவர்களினால் கல்வீச்சு

யாழில் பிரதமர் சென்ற ஹோட்டலின் வெளிப்புறத்தில் இனந்தெரியாதவர்களினால் கல்வீச்சு

யாழ்ப்பாணத்தில் உள்ள யூஎஸ் ஹோட்டலில் இரவு விருந்துக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்த வேளை அந்த ஹோட்டலின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த போதே இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஹோட்டல் மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் தெரிவித்தது எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

“யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு யூஎஸ் ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இரவு விருந்துக்கு சென்றிருந்தார்.

பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைக்கு அதிகளவில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாண நகரத்தில் மின் தடை ஏற்பட்டது. அந்தவேளை யூஎஸ் ஹோட்டலுக்கு வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

கல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் மேலும் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]