முகப்பு News Local News யாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

கவரிங் நகையை தங்க நகையென எண்ணிய திருடர்கள், அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் கொடிகாமம் கோயிலாமனைப் பகுதியில் மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாவகச்சேரிப் பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முன்பள்ளி ஆசிரியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இருவர் கோயிலாமனைப் பகுதியில் ஆட்கள் அரவமற்ற பகுதியில் வைத்து மறித்துள்ளனர்.

குறித்த இருவரது நடத்தையில் சந்தேகம் நிலவிய போதும் சடுதியாக சங்கிலியை அறுக்க முற்பட்ட போது, இது கவரிங் சங்கிலி எனக் கூற, திருடர்கள் யாருக்கு கதை அளக்கிறாய் எனக் கூறி சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் தப்பித்த இருவருக்கும் சுமார் இருபத்திரண்டு தொடக்கம் இருபத்தைந்து வயதுக்குட்பட்வர்கள் என பாதிக்கப்பட்வர் தெரிவித்தார்.

குறித்த நகை கவரிங் என்பதனால் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்யவில்லையெனவும்,

இதனால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டிவரும் என்ற அச்சத்திலும் முறைப்பாட்டினை பதிவு செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com