யாழில் . தனியாக வீட்டில் இருந்த பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து கப்பம்

யாழில். தனியாக வீட்டில் இருந்த பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து கப்பம் கோரிய நபர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ். அச்சுவேலிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்று புதன்கிழமை (27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுப்பிட்டிப் பகுதியில் வீட்டில் இந்த பெண்ணின் தனியாக இருந்த வேளையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க இந்த நபர் பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து 5 லட்சம் கப்பம் கோரியுள்ளார்.

பெண் அலறிய போது அயலவர்கள் அங்கு சென்றுள்ளனர்.அதன் போது, இந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பெண் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (28) இந்த நபர் அச்சுவேலிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையின் பின்னர் இவ்வாறு பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன், கப்பம் கோரியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.