யாழில் தடையை மீறி நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளையின் சூட்டிங்!

நடிகர் ஆர்யாவை மையமாக வைத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் சூட்டிங், இலங்கையில் உள்ள நூலகம் ஒன்றில் தடையை மீறி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

நடிகர் ஆர்யா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கு ஜோடி தேடி வருகிறார். ஆர்யாவை கரம்பிடிக்கும் ஆசையில், 16 பெண்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதில் தனக்கு சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க மாட்டார் என்று தோன்றும் பெண்களை, ஆர்யா ஒவ்வொரு வாரமும் வெளியேற்றி வருகிறார். இப்போது வரை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் 7 பெண்கள் வரை வெளியேறி உள்ளார். மீதமுள்ள 11 பெண்கள் ஆர்யாவை கரம்பிடிக்கும் ஆசையில் தினமும் பல்வேறு போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்திருந்தாலும், தொலைக்காட்சியில் சில நாட்கள் கழித்தே ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், ராஜஸ்தானில் இந்த நிகழ்ச்சியின் சூட்டிங் நடப்பதால் இது பற்றிய தகவல்கள் பெரிதும் வெளிவராமலே இருந்தது.

 

இந்நிலையில், இந்நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெறும் 4 போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் உள்ளனர். அந்த 4 பெண்களின் வீடுகளுக்கும் சென்று நடிகர் ஆர்யா அவர்கள் குடும்பத்துடன் பழகி வருகிறார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா மற்றும் சுசானா
அந்த வரிசையில், அந்த நான்கு போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த சுசானாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். சுசானா கனடாவில் செட்டில் ஆகிவிட்டாலும், அவரின் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு ஆர்யா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நூலகத்தில் நிகழ்ச்சி குழுவினர் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் முறையான அனுமதி இல்லாமல் நூலகத்திற்குள் படப்பிடிப்பு நடத்தியதாக புகாரும் எழுந்துள்ளது. ஏற்கனவே, சுசானாவுக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விவாகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இலங்கையில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ படப்பிடிப்பால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]