யாழில் சமூர்த்தி பயனாளிகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண விசேட செயலமர்வு

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான சமூர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது

யாழ் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் பி.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரீசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்

யாழ் மாவட்டத்தில் சமூர்த்தி பயானாளிகள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் அமைச்சர் உத்தியோகத்தர்களை கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு வழங்கி வைத்தார்

அத்துடன் தேங்கு நிலைகளில் காணப்படுகின்ற பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்க அமைச்சர் அதிகாரிகளை இங்கு பணித்ததுடன் அமைச்சினால் அடுத்த ஆண்டு கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள உதவித்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு தெளிவுபடுத்திதானர்.

இதேவேளை சமூர்த்தி திணைக்களத்தின் முத்திரை குலுக்கல் வீட்டுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பேருக்கு தலா இரண்டு லட்சம் வீதம் நிதியுதவி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அருணை திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பத்து பேருக்கு தொழில் உபகரணங்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சின் செயலாளர் சிராணி வீரக்கோன்,சமூர்த்தி பணிப்பாளர் தடாலகே
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]