யாழில் சட்டவிரோத கேபிள் நிறுவனங்களுக்கு தடை

கேபிள் நிறுவனங்களுக்கு

உரிய அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் நடத்திச் செல்லப்பட்ட கேபிள் தொடர்புகள் நேற்று முதல் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு இணங்க உரிய அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் நடத்திச் செல்லப்பட்ட கேபிள் தொடர்புகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த சேவை நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்திய மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் அனைத்து கேபிள் தொடர்புகளை வழங்கும் நிறுவனங்களும், தம்மை பதிவு செய்து கொள்ள கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், அவ்வாறு பதிவு செய்யாத மூன்று நிறுவனங்களின் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]