யாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே

கஜா புயல் காரணமாக நேற்றிரவு முதல் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் வடக்கு மாகாணத்தில்  பலத்த காற்றும் கடும் மழையும் காணப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை நவாலிப் பகுதியில் பெரிய மரம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக அருகே இருந்த இரு கடைகளுக்கு சேதமேற்பட்டுள்ளன.உடனடியாக அப்பகுதிக்கு சென்ற அனர்த்த முகாமைத்துவ மீட்பு குழுவினர் குறித்த மரத்தை அகற்றி போக்குவரத்தினை சீர்செய்துள்ளனர்.

இவ் அனர்த்தத்தில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லையென தெரியவருகின்றது. \

யாழில் கோரதாண்டவம் யாழில் கோரதாண்டவம் யாழில் கோரதாண்டவம் யாழில் கோரதாண்டவம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]