யாழில் குள்ள மனிதர்கள் மக்கள் மீது தாக்குதல்- பீதியில் பொதுமக்கள்

யாழ்ப்பாணம், அராலி பகுதியில் குள்ள மனிதர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இங்குள்ள மனிதர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதுடன், வீடுகள் மீதும் கல் வீச்சிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இவர்கள் வீட்டு கூரைகள் மீது தாவி திரியும்போது மக்கள் அவல குரல் எழுப்பியதும், கூரையில் இருந்து மதிலுக்கு பாய்ந்து மரத்திற்கு மரம் தாவி பாய்ந்து ஓடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்களை சிலர் துரத்தி சென்ற போது அவர்கள் அராலித்துறை நோக்கி ஓடித் தப்பியதாகவும், அவர்கள் கைகளில் கைக் கோடரி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர், கடல் தொழிலுக்கு சென்ற ஒருவரை வீதியில் மறித்த மிக குள்ளமான தோற்றமுடைய இருவர் அவரை விசாரித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த ஆட்சி காலத்தில் கிறீஸ் பூதத்தின் நடமாட்டங்கள் மக்களை அச்சத்தில் உறைய வைத்துதிருந்தமை குறிப்பிடத்தக்கது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]