யாழில் காலாவுக்கு வந்த சோதனை?? இளைஞர்களினால் பெரும் பரபரப்பு

ரஜினி காந்த் நடிக்கும் காலா திரைப்படத்தின் சுவரொட்டிகளை யாழில் இளைஞர் சிலர் கிழித்தெறிந்ததுடன், இதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளானர்.

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு விவகாரத்திற்கு பின்னர் அங்கு சென்ற ரஜினி காந்த், போராடும் மக்களை அவமதிக்கும் விதமாக பேசி பின்னர் உலகெங்கிலுமிருந்து தமிழர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

யாழ் செல்வா திரையரங்கில் காலா திரையிடப்படவுள்ளது. அதற்கான சுவரொட்டிகள் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள நிலையிலேயே, அவற்றை இந்த இளைஞர் கிழித்தெறிந்துள்ளார்.

இவரது செயலுக்கு சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]