யாழில் இருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜனுக்கு வாள் வழங்கி கௌரவித்தார் சீ.வி.விக்னேஸ்வரன்

இந்திய துணைத்தூதுவர்

யாழில் இருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜனுக்கு வாள் வழங்கி கௌரவித்தார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று; இரவு (25) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் துணைத் தூதுவருக்கு பொன்னாடை போர்த்தியும், தனது நினைவுப் பரிசாக வாள் ஒன்றினையும் கையளித்தார்.

இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜா எதிர்வரும் மார்ச் மாதம் தனது சேவைக் காலத்தினை நிறைவுசெய்து இந்தியா டெல்லிக்கு திரும்பவுள்ள நிலையில், அவரது சேவையினைப் பாராட்டி கௌரவிப்பு இடம்பெற்றது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, மற்றும் வடமாகாண அவைத் தலைவர், சீ.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், வீ.ஆணந்தசங்கரி, வடமாகாண அரசாங்க அதிபர்கள், பிரதம செயலாளர், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் அரச அதிகாரிகள், கல்விமான்கள், உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டு, துணைத் தூதுவரை கௌரவித்ததுடன், தமது நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

இந்திய துணைத்தூதுவர் இந்திய துணைத்தூதுவர் இந்திய துணைத்தூதுவர் இந்திய துணைத்தூதுவர் இந்திய துணைத்தூதுவர் இந்திய துணைத்தூதுவர் இந்திய துணைத்தூதுவர் இந்திய துணைத்தூதுவர் இந்திய துணைத்தூதுவர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]