யாழில் இந்து சமய அமைச்சராக இஸ்லாமியரின் நியமனத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையின் இந்து சமய விவகார துணை அமைச்சராக இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நல்லூர் கோயிலின் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை சைவமகா சபையினால் நடத்தப்பட்ட இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்கு முன்பாக ஒன்று கூடிய அவர்கள், அமைதியான முறையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

செவ்வாய்க்கிழமை சில அமைச்சுக்களின் பொறுப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு, துணை அமைச்சு பதவிகளும் இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.

இதன்படி, இந்து சமய விவகார அமைச்சின் பிரதி அமைச்சராக இஸ்லாம் மதத்தை சேர்ந்த காதர் மஸ்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்.

இதற்கு இந்துக்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அமைச்சரின் நியமனத்திற்கு எதிராக யாழில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் காதர் மஸ்தான் நியமனத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]