யாழில் ஆசிரியருக்கு நடந்த கொடுமை!

மோட்­டார் சைக்­கி­ளில் வீதி­யில் சென்­று­ கொண்­டி­ருந்த ஆசி­ரி­யை­யின் இரண்­ட­ரைப் பவுண் சங்­கி­லியை பிறி­தொரு மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற கொள்­ளை­யர்­கள் அறுத்­துக்­கொண்டு ஓடித்­தப்­பி­னர் என்று முறை­யி­டப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் ஆவரங்­கால் கிழக்­கில் யாழ்–­ப­ருத்­தித்­துறை வீதி­யில் இடம்­பெற்­றது. அச்­சு­வேலி சரஸ்­வதி வித்­தி­யா­சா­லை­யில் கற்­பிக்­கும் ஆசி­ரியை பாட­சாலை முடிந்து ஆவ­ரங்­கால் கிழக்­கி­லுள்ள தனது வீட்­டுக்­குச் சென்­று­கொண்­டி­ருக்­கும்­ போது அவ­ரைப் பின்­தொ­டர்ந்த இரு­வர் சன நட­மாட்­டம் இல்­லாத இடத்­தில் சங்­கி­லியை அறுத்­துக்­கொண்டு சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

தனது சைக்­கி­ளில் இருந்து விழுந்த ஆசி­ரியை படு­கா­ய­ம­டைந்­தார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக அச்­சு­வேலி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]