யாழில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

இன்றையதினம் நடைபெற்று வரும் உள்ளுராட்சிசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் யாழ் மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுவருகின்றன. இன்று காலை ஏழு மணி தொடக்கம் வாக்குப்பதிவுகள் யாழ் மாவட்டத்திலுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களிலும் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் தொடக்கம் முதியவர்கள் என சகல தரப்பினரும் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையத்திற்கு வருகைதந்து நீண்ட வரிசைகளில் நின்று தமது வாக்குகளை செலுத்தி செல்கின்றனர்.

வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்காளர்களின் பாதுகாப்பபை உறுதிப்படுத்துவிதமாக ரோந்துப்பணிகளிலும் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்முறை யாழ். மாவட்டத்தில் நான்கு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து நானூற்றிஎழுபத்தாறு பேர் வாக்களிக்கதகுதிபெற்றுள்ளதுடன், இவர்கள் வாக்களிப்பதற்கெனமாவட்டம் முழுவதிலுமுள்ள 243 வட்டாரங்களிலும் 521 வாக்களிப்புநிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகின்றது.

வாக்குப்பதிவுவாக்குப்பதிவுவாக்குப்பதிவுவாக்குப்பதிவு