யாழிற்கு விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ்

வடமாகாண சபை மக்களுக்கான பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் செய்யத் தவறிவிட்டதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், யாழ்.மாநகர முதல்வருமான இம்மானுவேல் ஆர்னோல்ட் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் இன்று திங்கட்கிழமை (18) யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை மாநகரச சபையில் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில், யாழ்.மாநகர சபை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாநகர முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். நான் மாநகர முதல்வராக, பதவியேற்ற பின்னர் சந்திக்க வேண்டுமென ஆர்வம் கொண்டமையினால் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் போது, பல விடயங்கள் பேசப்பட்டன. அதில் 3 விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

மாநகச சபை முதல்வராக பொறுப்பேற்றபின்னர் சாதிக்க டியதாக இருக்கின்றதாக என்றும், மாகாண சபை மக்களுக்கான தேவைகளை சரியான முறையில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகின்றதாகவும், அவை உண்மையா என்றும் உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழிற்கு விஜயத்தை

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மாகாண சபை அபிவிருத்தி திட்டங்களை செய்யத் தவறியதை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், கட்சி ரீதியாக வேறுபட்டிருந்தாலும் ட சகல உறுப்பினர்களையும் இணைத்து மிக ஒற்றுமையுடன், அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கின்றோம். கட்சி வேறுபாடுகள் சகல மக்களின் வாழ்க்கை தரத்தினையும் அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒரே எண்ணப்பாட்டினைக் கொண்டிருப்பதுடன், புதிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு வெளிநாட்டு நிதிகளையும், ஏனைய நலன்விரும்பிகளின் நிதிகளையும் எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினராக இருந்து மாநகர சபைக்கு வருகை தந்துள்ளதுடன், பல சவால்களை மாகாண சபையாக இருந்து செய்ய வேண்டிய பல விடயங்களை செய்யத் தவறிவிட்டோம் என்பதனை ஒப்புக்கொண்டேன். மாகாண சபையில் இருந்த போது, எத்தனையோ வாய்ப்புக்களை தவறவிட்டதை நன்கு அறிந்தவன் என்ற ரீதியில் பல விடயங்களைத் தவறவிட்டுவிட்டோம். போர் முடிந்த பின்னர் எவ்வாறு எமது மக்கள் இருந்தார்களோ, அதே நிலையில் இன்றும் எமது பல குடும்பங்கள் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அந்த மக்களை நோக்கி எமது அபிவிருத்தி திட்டங்கள் எவையும் முறையாக செயற்படவில்லை என்பதனை மாகாண சபையிலும் உணர்ந்தோம், இப்போதும் உணர்கின்றோம். எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும், தகுதியுடையவர்களுக்குத் தான் கிடைக்கும் என்ற அடிப்படையில், உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. வறியவர்கள் நோக்கிய அபிவிருத்தியை முறையாகச் செய்ய தவறிவிட்டோம் என்பதனை ஒப்புக்கொண்டுள்ளேன்.

எமது மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய முடியாமல் இருக்கின்றார்கள். பொருளாதாரத்தினை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை. நாட்டில் உள்ள பொருளாதார சூழல், வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி, புதிய வேலைவாய்ப்பினை வழங்க முடியாத நிலை, அத்துடன், மக்களுக்குத் தெரிந்த தொழில்களை மேம்படுத்த சந்தைவாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்க முடியாத சூழ்நிலை. அவ்வாறான காரணங்களினால், எமது மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய முடியாத நிலை காணப்படுகின்றதாகவும் யாழ்.மாநகர முதல்வர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]