யாழிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விஜயம்!!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்; எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆராய்ந்தார்.

தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (01) காலை 11.00 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள நல சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றினை மேம்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமன்றி, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான உள சமூக செயற்பாடுகளை ஆராய்ந்து, அவர்களின் தேவைகள் குறித்து அறிக்கையிடுவதுடன், தீர்;ப்பதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்தல் வேண்டும்;.
இவ்வாறு ஆராய்ந்த போது, வவுனியா பகுதியில் இராணுவத்தினரால் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கும் போது, பேரம் பேசப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களிடையே நல்லிணக்கத்தினையும், ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த பல செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறும் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், இந்த வேலைத்திட்டங்களை எதிர்வரும் மே மாதம் ஒரு செயற்திட்டம் முன்னெடுக்கவுள்ளதாகவும், பெண் தலைமைத்துவ குடும்பங்களிடம் தனியார் நிறுவனங்கள், கடன் திட்டங்களை முன்னெடுப்பதும், அங்கு பேசப்படும் பேரங்கள் தொடர்பாகவும், மத்திய வங்கியின் கீழ் வரும் நிறுவனங்களை அவ்வாறா செயற்பாடுகளை கவனிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவற்றினை தடை செய்வதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலந்துரையாடலின் போது, தெரிவித்தார்.
அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட உள சமூக உத்தியோகத்தர்கள், பாதிக்கப்பட்டவர்களின் அபிவிருத்தி மற்றும் உள சமூக செயற்பாடுகளை மிகுந்த பாதுகாப்பு மற்றும் சிரத்தையுடன் செயற்படுத்துமாறும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]