யாழிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிக்பாஸ் பிரபலம்- யார் தெரியுமா??

பிக்பாஸ் எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் கணேஸ் வெங்கட்ராமன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றையும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பு எடுத்த புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

இதேவேளை அவர் தனது பதிவில் நிகழ்ச்சியொன்றிற்காக இலங்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கணேஸ் வெங்கட்ராமன் பல படங்களில் நடித்திருப்பதுடன், அவரது மனைவியான நிஷா தமிழ் சின்னத்திரைகளில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.