யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்

கொட்டும் மழையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.மாநகர சபை மைதானத்தில் உலகுவானூர்தியில் வருகை தந்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கௌரவித்து பிரதமரை வரவேற்றார்.

யாழிற்கு இன்று விஜயம் யாழிற்கு இன்று விஜயம்

விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொட்டும் மழையில் வருகை தந்துள்ள பிரதமர் யாழில் உள்ள செற்விங் நட்சத்திர ஹோட்டலில் தங்கி நின்று நாளை திங்கட்கிழமை (28) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் காணி விடுவிப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயவுள்ளார்.

நாளை திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும், அதன்பின்னர், அரசியல்வாதிகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருடன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]