யார் இந்த பத்மாவதி? எதற்காக இந்த சர்ச்சை?

பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் பத்மாவதி.

Padmavati

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள “பத்மாவதி” வெளிவருவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது.

Padmavati

இந்த திரைப்படம் வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர்களின் அமைப்புகளும், பல வலதுசாரி அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் போராட்டமும் நடத்துகின்றன.

பத்மாவதி எனும் ராணியின் வரலாறு தான் என்ன? ஏன் பத்மாவதிக்கு இத்தனை சிக்கல்.

Padmavati

மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய சூஃபி கவிஞர் மத்திய இந்தியாவில் பேசப்படும், தற்போது ஹிந்தியில் ஒரு அங்கமாகக் கருதப்படும் ‘அவதி’ மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய ‘பத்மாவத்’ எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Padmavati

தற்போதைய ராஜஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மாவதி, ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி என்று ராஜபுத்திரர்கள் கூறுகின்றனர்.

வாய் வழி வரலாற்றில் அவர் ரத்தன் சிங் என்று அறியப்படுகிறார்.

Padmavati

ரத்தன் சிங் போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி மேவார் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய சித்தோர்கார் மீது படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து தப்பிக்க பத்மாவதி உடன் கட்டை ஏறியதாக ராஜபுத்திரர்கள் நம்புகின்றனர்.

Padmavati

பத்மாவதியுடன் பல ராஜபுத்திர பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு இறந்ததாக ராஜஸ்தானில் ஒரு வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே உறவு இருந்ததாக தவறான செய்தி இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும், ராணி பத்மாவதியை தெய்வமாக வணங்கும் ராஜபுத்திரர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Padmavati

அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பத்மாவதி கற்பனை பாத்திரம்தான், அவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கிய “கர்னி சேனா” அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கி அவரின் சட்டையைக் கிழித்தனர்.

Padmavati

கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா சூப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என கூறியிருந்தார்.

சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் “அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை” எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.

Padmavati

யோகி ஆத்யநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1ம் திகதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு பத்மாவதி திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.

Padmavati

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, ராஜபுத்திர மன்னர்களின் தலைநகராக விளங்கிய சித்தோர்கார் கோட்டை உள்பட பிற மாநிலங்களிலும் இந்தத் திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]