பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்ரின் பிறப்பு இந்தியாவின் மேற்குக்கடலோரத்தில் கொங்கணி என்ற பிரதேசத்தில், ரத்னகிரி மாவட்டத்தில் அம்பவாடே என்ற கிராமத்தில், 1891 ஏப்ரல் 14 – ஆம் நாளன்று, இராம்ஜீ-பீமாபாய் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார். அம்பேத்கரின் வீடு சிறிய வீடுதான் அம்பேத்கருடையது, ஒரு அறை வசதியுள்ள வீடு.

அதில்தான் அவர் வாழ்ந்து வந்தார். அம்பேத்கர் இரவு நேரத்தில் படிப்பதற்கு அவர் தந்தை பெரிதும் உதவினார். இரவு இரண்டு மணி வரை கண்விழித்திருந்து தன் மகனை இரண்டு மணிக்கு எழுப்பிவிட்டு தான் உறங்குவதற்கு செல்வார் அம்பேத்கரின் தந்தை. பின்பு இரண்டு மணியிலிருந்து விடிய விடிய படித்தவர் புரட்சியாளர். அவர் படிக்கும் காலத்தில் அவர் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே இருந்தது.

யார் இந்த அம்பேத்கர்

அதில் தான் அவர் படித்தார். இளம்பருவத்திலேயே அதிக புத்தகங்களை ஓய்வின்றிப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அம்பேத்கருக்கு திருமணம் இளம்பருவ வயதான 17 வயதிலேயே அவருக்கு திருமணம் நடைபெற்றது. அவரது துணைவியாராக 9 வயதே நிரம்பிய ராமாபாய் என்ற ஒருவர் வந்தார்.அம்பேத்கரின் படிப்புஅம்பேத்கருடைய பள்ளிக்கூட படிப்பின் போது, பள்ளியில் அவருக்கு கோணி சாக்குக் கொடுத்து ஒரு மூலையில் அமரவைக்கப்பட்டார்.

பானையில் இருக்கும் தண்ணீரை அருந்துவதற்கு உரிமையில்லை. இப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்த பீமாராவுக்கு (அம்பேத்கருக்கு) அவருடைய ஆசிரியரான ‘அம்பேத்கர்’ பெரிதும் துணைபுரிந்தார். அதன் காரணமாகவே பின்னாளில் புரட்சியாளர் அண்ணல் அவர்கள் தனது பெயரை ‘அம்பேத்கர்’ என மாற்றிக்கொண்டார். பின்னர் ஒருவகையில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

வறுமை அவரை வாட்டி வதைத்தது. அந்த சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய முதல் பட்டமாகிய பி.ஏ பட்டத்தை 1912 – இல் முடித்தார். மேற்படிப்பைத் தொடர்வதற்கு இயலாத சூழ்நிலையில் இருந்தார். அப்போது அவரை பரோடா மகாராஜா தனது சொந்த செலவில் அமெரிக்க கொலம்பிய பல்கலைக் கழகத்திற்கு படிப்பதற்கு அனுப்பினார். அங்கு எம்.ஏ. பட்டத்தை 1915 – இல் முடித்தார். லண்டன் மாநகரில் படிக்க வேண்டுமென்று ஒரு ஆசை இருந்தது. அதற்கேற்றவாறு அவர் 1916 – ஜீன் மாதம் அமெரிக்க மண்ணைவிட்டு லண்டன் நகருக்கு புறப்பட்டார். 1921 – ஜீன் மாதத்தில் ‘மாஸ்டர் ஆப் சையன்ஸ்’ (Master off science) என்ற பட்டத்தைப் பெற்றார்.

யார் இந்த அம்பேத்கர்

பின்பு 1922 அக்டோபரில் ‘பாரிஸ்டர்-அட்-லா’ (Barrister-at-law) எனும் பட்டத்தைப் பெற்றார்.வழக்கறிஞர் பணி 1923 – ஜீன் மாதம் பாரிஸ்டராக, வழக்கறிஞராக அம்பேத்கர் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காக பாடுபட்டார்மாணவர்கள் நலனில் முக்கியத்துவம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தரமான கல்வியைக் கற்க வேண்டுமென எண்ணி அவர்களுக்காக பல உதவிகள் செய்தார். அப்படியான ஒரு உதவிதான் 1928 – ஜீன் மாதத்தில், ‘தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம்’ (Depressed Education Society)   என்ற ஒன்றினைத் துவங்கினார்.

இது துவங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது பல பொருளாதர சிக்கல் ஏற்பட்டது. அதனை ஈடுசெய்ய பல செல்வந்தர்களிடம் நிதி உதவியைக் கேட்டார், யாரும் உதவ முன்வரவில்லை. மேலும் அவர் நடத்தி வந்தக் கட்டிடத்தில் வாடகையை உயர்த்தி பல இன்னல்களை அளித்தனர். எல்லாவற்றையும் கடந்து மாணவர்களைப் பயனடையச் செய்தார் டாக்டர் புரட்சியாளர்.  தீண்டாமைக்கு எதிராக ஓங்கியக் குரல் அடிமைக்கு அவன் அடிமை என்பதனை உணர்த்தினால், அவன் அடிமைச் சங்கிலிகளை உடைப்பான். தீண்டாமை என்பதே அடிமைத்தனமாகும். இதை ஒழித்தாலொழிய தான் ஓர் கணமும் ஓயமாட்டேன். ஆயிரம் ஆண்டு அடிமையாய், தன்மானம் இழந்து இருப்பதைவிட, அரை நிமிடம் வாழ்வாங்கு வாழ்ந்து அமரனாவது, சாலச் சிறந்தது என்றும் அம்பேத்கர் குரல் கொடுத்தார்.

யார் இந்த அம்பேத்கர்

தீண்டாமை  இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் எந்தவித இனவேறுபாடும் இல்லை. தீண்டாமைக்கு இன அடிப்படை இல்லையோ, அவ்வாறே அதற்குத் தொழில் செய்யும் அடிப்படையும் இல்லை. தர்ம சூத்திரங்களின் காலத்தில் திருநிலை கெட்டவர்கள் ஒரு வர்க்கமாகக் காட்சி அளிக்கின்றனர். ஆனால் தீண்டப்படாதோர் என்ற பிரிவினை கி.பி. 400-க்குப் பிறகு ஏற்பட்டதாகும்.

‘தீண்டாமை’ என்பது புராதன சமுதாயத்திலும், பண்டைக்கால சமுதாயத்திலும் இருந்து வந்துள்ளது என அம்பேத்கர் கூறுகின்றார்.தீண்டப்படாதவர்கள் ஆதி முதற்கொண்டு தீண்டப்படாதோர் உடைந்த மனிதர்களே. உடைந்த மனிதர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டு வந்த காரணத்தால், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை ஏற்பட்டது.  மனுதர்ம சாத்திரங்கள் இருந்த காலத்தில் தீண்டாமை என்பது ஒன்று இல்லை. மனுதர்மம் கூறுகின்ற ‘சண்டாளர்கள்’ கூட ‘தீண்டப்படாதவர்கள்’ அல்ல. அவர்கள் சுத்தமில்லாதவர்கள் என்றுதான் மனுதர்மம் சொல்வதாக அண்ணல் கூறுகின்றார்.

தீர்மானங்கள் நீர்த்துப் போகும் பறிபோன உரிமைகளைப் பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ நியாயம் பிறக்காது. ஆடுகளைத்தான் கோவில்களின் முன் வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல. ஆடுகளாக ஈராதீர்கள். சிங்கங்கள் போல் வீறு கொண்டு எழுங்கள் எனவும் அண்ணல் அம்பேத்கர் உரைக்கின்றார்.தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதி தனித்தொகுதி என்பதை தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கவில்லை அன்றைய பிரிட்டீஸ் அரசாங்கம். இந்திய கிறிஸ்துவர், முஸ்லீம்கள், சீக்கியர் ஆகியோர் அனைவருக்கும் வழங்கியுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது ஏன் மகாத்மா காந்தி அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் பிரித்து இந்த நிலையை எடுத்துள்ளார் என்பது விசித்திரமாக இருக்கிறது என்றார் அம்பேத்கர்.

யார் இந்த அம்பேத்கர்

அம்பேத்கரின் கட்சி தனது மக்களுக்காகப் போராட வேண்டும். அவர்களுக்காக பல உரிமைகள் பெற வேண்டும் என நினைத்த அம்பேத்கர் அவர்கள் ஒரு கட்சியைத் தொடங்கினார். 1936 – ஆம் ஆண்டு ‘சுயேட்சை தொழிலாளர் கட்சி’ (ஐனெநிநனெநவெ டயடிழரச pயசவல) எனும் ஒரு கட்சியைத் துவங்கினார்.  அண்ணல் அம்பேத்கர் துவங்கிய கட்சியானது பல திட்டங்களை வகுத்தது. அந்தத் திட்டஙகளில் 1. நிலமற்ற விவசாயிகள், 2. ஏழை விவசாயிகள், 3. உழவர்கள், 4.தொழிலாளர்கள் ஆகியோரின் உடனடி கோரிக்கைகள் இடம்பெற்றன. மேலும் அதே திட்டங்களில், தீண்டாமையை ஒழிக்கவில்லை என்றால் தீண்டப்படாதோர் அனைவரும் இந்து மத்தைவிட்டு வேறுமதத்தில் சேருவதாக பிரடனம் செய்தது.உலக யுத்தமும் அம்பேத்கரும் 1939 – இல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது.

பிரிட்டீஸ் இந்திய அரசுடன், தாழ்த்தப்பட்ட மக்கள் ஒத்துழைத்தால் நல்ல சலுகை பெறலாம் என்ற எண்ணத்துடன் டாக்டர் அம்பேத்கர் பிரிட்டீஸ் அரசுடன் ஒத்துழைத்தார். ஆகவே யுத்தத்திற்கு ராணுவத்தில் சேர தாழ்த்தப்பட்டோரைக் குறிப்பாக யுத்த வீரர்கள் என்று பெயர்போன மாஹார்களைச் சேர்க்கத் தொடங்கினார்.புத்தமதமும் அம்பேத்கரும் மனித சமுதாயம் சட்டத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும். அல்லது அறத்துக்குக் கட்டுப்பட வேண்டும்.

யார் இந்த அம்பேத்கர்

இவ்விரண்டும் இல்லையென்றால் மனித சமுதாயம் சுக்கு நூறாக உடைந்துவிடும். சமயம் சரிவர செயல்பட வேண்டும் என்றால் அது பகுத்தறிவிற்கு அதாவது விஞ்ஞானத்திற்கு ஒத்தாக இருக்கவேண்டும். சமயம் ஒழுக்க தத்துவ முறைகளைக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதன் ஒழுக்கமுறை – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவைகளின் அடிப்படையில் ஏற்பட வேண்டும்.

வறுமையைப் புகழ்வதோ, புதினப்படுத்துவதோ சமயத்தின் திருப்பணியாக இருக்கலாகாது. இவைகள் அனைத்தையும் புத்தமதத்தில் காணலாம் என்று அம்பேத்கர் கூறினார்.இலங்கை சென்ற அம்பேத்கர் 1950 – மே, 25 – ஆம் தேதி கொழும்புவில் நடந்த புத்தமத மாநாட்டிற்குச் சென்றார். புத்தர் அனுமதிக்காத சடங்குகளைப் புத்தமதத்தில் புகுத்தியுள்ளதைக் கடுமையாகச் சாடினார்.

யார் இந்த அம்பேத்கர்

அம்பேத்கர் இறப்பு தாழ்த்தப்பட்ட மக்களின் இன்னல்களைப் நீக்கியப் புனிதர் அம்பேத்கர். அவரது இழப்பானது இந்தியாவில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேரிழப்பாகும். பல ஆதிக்க வர்க்கத்தின் சவால்களை கண்டு அஞ்சாமல் அவர்களுக்கு நேராக வாழ்ந்தது மட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்பையே எழுதிய மாமனிதர் அல்லவா புரட்சியாளர் அம்பேத்கர்.

எத்தனையோ கொடுமைகளை அனுபவித்த நல்லவர் கண்ணுறங்கினார். அவரை 1956 டிசம்பர் 6 ஆம் நாள் காலன் அழைத்துக்கொண்டான்.

பார்வை நூல் – அம்பேத்கர் வரலாறு – ஏ.எஸ்.கே

ப. மணிகண்டன், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி – 24.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]