யாரையும் எளிதில் நம்பாத ‘ராசி’க்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்க எப்படி??

ராசி

ஜோதிடதத்தின் படி சில ‘ராசி’க்காரர்கள், யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்கள். அவர்கள் எந்தெந்த ‘ராசி’காரர்கள் என பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தனது பிடிவாத குணத்தால் யாரேனும் மன்னிப்பு கேட்டால், எளிதில் மன்னிக்கமாட்டார்கள். யார் மனதையும் புண்படுத்தாத இந்த ராசிக்காரர்கள் தனக்கு யாரேனும் தீங்கு செய்தால், அவர்களை பழி வாங்க நினைக்கவும் மாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அவ்வளவு எளிதில் மன்னிக்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் முடிந்த அளவு பிரச்சனையை பெரிதாக்குவர். இவர்களிடம் மன்னிப்பு கேட்டால், காதில் விழாதது போல பிரச்சனையை மேலும் பெரிதாக்கிவிடுவார்கள்.

கன்னி:
இவர்கள் தங்களுக்கு என ஒரு தரம் கொண்டிருப்பார்கள். இவர்களும் அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களை மன்னிக்கமாட்டார்கள். யாரேனும் ஏதேனும் கெடுதல் அல்லது துரோகம் செய்தாலோ, அவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள் மறக்கவும் மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் உங்களது நண்பர்களா இருந்தால், அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களையும் தேவைகளை விட தனிப்பட்ட முறையில் எடுக்க முனைவார்கள். இந்த ராசிக்காரர்களின் மனதில் முழு உறவு, நட்புறவும் பொய் என எண்ண துவங்கிவிடுவார்கள். தவறு செய்தோர் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவர்களின் மனதை புண்படுத்திய பின் மன்னிப்பார்கள்.

மகரம்
இவர்கள் மன்னித்தது போல நடிப்பார்களே தவிர, மனதளவில் மன்னிக்கமாட்டார்கள். இவர்களிடம் மன்னிப்பு கேட்டால், செய்த தவறைச் சொல்லி காட்டி, மனதை எவ்வளவு காயப்படுத்த முடியுமோ, அவ்வளவு புண்படுத்தி, அவர்களை தலைகுனியச் செய்வார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]