யாருடனும் கூட்டிணைவோ அல்லது யாரோடும் சேர்ந்து கூட்டாட்சியையும் அமைக்கவில்லை- சுமந்திரன் தெரிவிப்பு!!

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈபிடிபி உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. யாருடனும் கூட்டிணைவோ அல்லது யாரோடும் சேர்ந்து கூட்டாட்சியையும் அமைக்கவில்லை.

அவ்வாறு நாங்கள் கூட்டிணைவு அல்லது கூட்டாட்சி என்று ஊடகங்கள் கூறுவது அர்த்தமற்றது என்பதுடன் அடிப்படையில்லாத செய்திகள் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பிரதான வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை(07)  நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தக் கட்சியோடும் கூட்டாட்சி அல்லது ஒப்பந்தம் செய்தள்ளதா என்று சகல சபைகளையும் ஆராய்ந்து பார்த்தால் தெரியுமென்று குறிப்பிட்டுள்ள சுமந்திரன் அவ்வாறு ஆராய்ந்து பார்த்து கூட்டிணை என்று யாராவது கண்டுபிடித்தால் அவருக்கு பரிசில் வழங்குவதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களில் நிர்வாகங்களை அமைக்கும் செயற்பாடுகள் தொடங்கிய முதல் நாளோ ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணயும், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியும் போட்டியிட்டது. ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னர் நான் ஒரு விடயத்தைக் கூறியிருந்தேன்.
அதாவது உள்ளுராட்சி மன்றங்களில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எந்தெந்தக் கட்சி எங்கு எங்கு எல்லாம் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவர்கள் ஆட்சிமைக்க ஏனைய கட்சிகள் அதற்கு ஆதரவை வழங்க வேண்டுமெனக் கோரியிருந்தேன்.

ஆயினும் இந்தக் கோட்பாட்டின் பிரகாரம் ஒழுக மாட்டோமென உள்ளுராட்சி மன்றங்களை அமைக்கும் முதல்நாளிலேயே அவர்கள் செயலில் காட்டியிரந்தனர். ஆகையினால் நாம் மட்டும் அந்தக் கோரிக்கையை தனியாக அதனைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் நாமும் அதற்கு மாறான செயற்பாடுகளை முன்னெடுத்து சசாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை உள்ளிட்ட சபைகளையும் கைப்பற்றியிருக்கின்றோம்.

இதனை வைத்து ஈபிடிபி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டமைப்பு கூட்டிணைவு, கூட்டாட்சி, கூட்டு என்றெல்லாம் ஊடகங்கள் அடிப்படை இல்லாத செய்திகளை வெளியிட்டிருந்தன. இவை எல்லாவற்றுக்குமாக நெடுந்தீவுப் பிரதேச சபையில் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றியதனூடாக பதில் தெரிய வந்திருக்கும்.

மேலும் உள்ளுராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியோடும் கூட்டமைப்பு கூட்டாட்சி அமைக்கவில்லை. அவ்வாறு கூட்டாட்சி அமைப்பதாயின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் என்பன பங்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஒப்பந்தங்கள் ஏதும் இல்லாத படியால் இங்கு அவ்வாறு ஏதுமே நடக்கவில்லை.

ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே அவ்வாறு இருக்கின்றது.
ஆகவே கூட்டமைப்பு ஈபிடிபியோடோ அல்லது வேறு கட்சிகளினுடனோ கூட்டாட்சி அல்லது கூட்டிணைவு அல்லது  கூட்டரசாங்கம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஆகவே இதனை கூட்டிணைவு கூட்டாட்சி என்று இதனை ஒவ்வொரு சபையாக ஆராய்ந்து பார்த்து அவ்வாறு இருக்கிறது என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசொன்றையும் கொடுக்கலாம்.

ஒரு சபையால் வாக்களிக்கிற ஒரு கட்சி அடுத்த சபையில் எங்களுக்கு எதிராக வாக்களிக்கிறது. அதுவே நான் சொல்வதற்கு ஆதாரம். நூங்கள் சொன்ன கொட்பாட்டின் பிரகாரம் நாங்கள் ஒழுகுவதற்கு கடைசி வரையும் தயாராக இருந்தோம். ஆனால் மாநகரசபையில் நடந்ததன் பிரகாரம் நாங்கள் அதனை ஒழுக முடியாமல் போயிரந்தது. குறிப்பாக வேலனையில் எங்களுக்கு அதிக ஆசனம் இருந்தும் ஈபிடிபி மகிந்தவின் தாமரை மொட்டோடு சேரந்து எங்களிடத்தில் இரந்து தட்டிப்பறித்த செயற்பாடுகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது.

இப்பொழுது ஆட்சியமைக்கிற ஒழுங்குமுறைகள் முடிவிற்கு வந்த கொண்டிருக்கிற போது ஒழுங்கான முறையில் இந்தச் சபைகள் அனைத்தும் இயங்க வேண்டுமென்பது தான் கூட்டமைப்பின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கிற இந்த உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிகள் முடங்காமல் இருக்கின்ற வகையில் செயற்படுவதற்கு புரண ஒத்துழைப்பை கொடுக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை.

ஆகவே நாங்கள் ஆட்சிமையக்காத சபைகளிலும் ஆட்சியமைத்தவர்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம் அதே போன்று மற்றவர்களும் மக்கள் சேவைiயைக் கருத்திலே கொண்டு செயற்படுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]