யாராவது தனித்து ஆட்சியமைக்குமாறு ஞானசார தேரர் கோரிக்கை

நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை காணப்படுவதால் யாராவது ஒரு தரப்பினர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்துகொண்டு தமக்கு தேவையான அரசாங்கமொன்றை அமைக்க முடியாது எனின் அந்த பதவியில் இருந்து என்ன பயன்” என்றும் ஞானசார தேரர் கேள்வி கேட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தை நடத்திச் செல்ல ரணில் விக்ரமசிங்கேவுக்கோ அல்லது உள்ளூராட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கோ இடமளிக்க வேண்டும் என அவர் மேலும் குறிபிட்டுள்ளார்.