யானை வேலிகளை நிர்மாணிக்க பணிப்பு

2500 கிலோமீற்றர் நீளமுடைய யானை வேலிகளை நிர்மாணிக்கும் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற யானை வேலிகள் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின்போது, யானை வேலிகளை முறையாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறைபாடுகள் உள்ள மற்றும் செயற்படாமல் உள்ள மின்சார வேலிகளை உடனடியாக புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, யானை வேலிகளை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஆயிரத்து 860 பேர் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 4000 கிலோமீற்றர் நீளமுடைய யானை வேலிகளை பராமரிப்பதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்று இந்த கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]