யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம், அலிக்கம்பை வயல் பிரதேசத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆலையடிவேம்பு, கோளாவில் பகுதியை சேர்ந்த 63 வயது நிரம்பிய வைரமுத்து நடராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று புதன்கிழமை (02) அதிகாலை அலிக்கம்பை வயல் பிரதேசத்தில் வழமை போன்று காவல் கடமையின் நிமித்தம் பரன் குடிசை ஒன்றில் இவர் உறக்கத்திலிருந்தபோது யானை தாக்கியுள்ளது.

இதனையடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஏழு மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]