யானை தாக்கி பண்ணையாளர் பலி
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கார்மேல்மலை பகுதியில் இன்று (11) யானை தாக்கி பண்ணையாளரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பெண் பாடசாலை வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னலப்பை நூர் முகமட் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கார்மேல்மலை பகுதியிலுள்ள தனது பண்ணைக்கு இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை காலை 7 மணியளவில் யானை தாக்கியுள்ளது. இதில் ஒருவர் தப்பியோட சின்னலப்பை நூர் முகமட் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
சடலம் ஏறாவூர் ஆதாரவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை குறித்த பகுதியில் வைத்து காட்டு யானைத் தாக்குதலினால் வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் முத்துலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 51) என்ற விவசாயி உயிரிழந்ததை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]