மோதரை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

                     மோதரை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மோதரை

மோதரை 227 ஜோன் பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 02.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மோதரை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

கதிரானவத்தை, மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், மேலதின விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மோதரை பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]