மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 1018 பேர் பலி

கடந்த வருடத்தில் இடம்பெற்ற 2,947 வீதி விபத்துக்களில், 3126 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் அதிகமானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் என, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 1018 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் இளம் வயதினர் ஆவர்.

அத்துடன், வீதி விபத்துக்களில் 950 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]