மோட்டார் சைக்கிள், இணையம் மீதான வரி குறைப்பு

இணையச் சேவைகளுக்காக அறவிடப்பட்டு வந்த 10% தொலைத்தொடர்பு வரியை முற்றாக நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த வரி குறைப்பு செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் அமுல் படுத்தப்படும்.

இதேவேளை, சிறிய லொறி மற்றும் கப் (Cab) ரக வாகனங்கள் மீதான வரியை 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 இலட்சமாக உள்ள குறித்த வரி 7 இலட்சமாக குறைக்கப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிள்

மேலும் 150 CC ஐ விட இயந்திர கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வரி 90 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் வரி குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]