மோடி இன்று இலங்கை வருகிறார் விசேட போக்குவரத்து திட்டம்

மோடி இன்று இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.இவரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட வாகன போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில்,

2017 சர்வதேச வெசாக் வைபவத்தில் கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தை அடுத்து கொழும்பு நகரில் விசேட வாகனப்போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இன்று மாலை 6 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினூடாக இலங்கைக்கு வரவுள்ளார்.

மாலை 6.15 லிருந்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொட பேஸ்லைன் வீதியில் பொரள்ளை , டி.எஸ்.வீதி சமிஞ்சை சந்தி , கிறீன்பாத், நெலும்பொக்குன (தாமரைத்தடாகம்) பொதுநூல்நிலைய சுற்றுவட்டம், ஆனந்தகுமாரசுவாமி மாவத்த ,மல்பார, பித்தளச்சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்த , கங்காராம மற்றும் சீமமாலக்கய வரையிலும் ,

இரவு 7.15க்கு சீமாமாலக்கயிலிருந்து நவமாவத்தை உத்தரானந்த மாவத்த அலியாநாநவட்டறவும, மொகமட் மாக்கார் மாவத்த, காலிமுகத்திடல் சுற்றுவட்டம், தாஜ்சமுத்திரா ஹோட்டல்,
இரவு 8.20க்கு தாஜ் சமுத்திரா ஹோட்டலிலிருந்து காலி வீதி என்.எஸ்.ஏ.சுற்றுவட்டம் ஊடாக ஜனாதிபதி மாளிகை.

இரவு 10.30க்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து என்.எஸ்ஏ.சுற்றுவட்டமூடாக காலிவீதியில் தாஜ் சமுத்திரா ஹோட்டல்,

நாளை 12ஆம் திகதி காலை 9.05க்கு தாஜ் ஹோட்டல் காலிமுகத்திடல் சுற்றுவட்டம் கொள்ளுப்பிட்டி சந்தி , லிபேட்டி சந்தி , பித்தள சந்தி, செஞ்சிலுவை சங்க சந்தி, நூல்நிலைய சுற்றுவட்டம், கிளாஸ்கவுஸ் சந்தி, நந்தாமோட்டாஸ், சுதந்திரசதுக்க சுற்றுவட்டம், சுதந்திர சதுக்கம், சுதந்திர மாவத்தை பௌத்தலோக மாவத்தை மெட்லண்ட் ஒழுங்கை சந்தி, பௌத்தலோக மாவத்தை ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்.

காலை 10.50க்கு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபம் , பௌத்தலோக மாவத்தை , யாவத்த சந்தியில் வலதுபக்கமாக திரும்பி யாவத்த வீதி ஹெம்பட்டிபொல சந்தியில் தெற்கு பக்கமாக திரும்பி ஹெப்பட்டிபொல மாவத்தை ஊடாக பொலிஸ் கேந்திர படைத்தலைமையக மைதானாதிடலின் வெளிப்புற பாதை.

மேலே குறிப்பிட்ட வீதியினூடாக இந்திய பிரதமர் பயணம் செய்யும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மேலே குறிப்பிட்ட நேரங்களில் இந்த வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளும் முழுமையாக மூடப்படும்.
ஒருபக்கமாகவேனும் அல்லது வாகனங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
இன்று இந்திய பிரதமர் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் களனிப்பாலத்தினூடாக பேஸ்லைன் பாதையில் பயணிக்கும் வரையில் மாலை 5.45 இலிருந்து அதிவேக வீதியில் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையிலான வீதியில் ஒருநிரல் மாத்திரம் மூடப்பட்டிருக்கும்.

இந்த நேரங்களில் பேலியகொட பக்கத்திலிருந்து கட்டுநாயக்க வரையில் பயணிக்கும் வாகனங்கள் பிரவேசிப்பதில் எந்தவித தடையின்றி பயணிக்கமுடியும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]