மோடியின் பாதுகாப்புக்கு கறுப்பு பூனை படை கொழும்பில் களத்தில்

மோடியின் பாதுகாப்புக்கு கறுப்புப் பூனை படையொன்று கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வருகிறார்.

இவரின் பாதுகாப்புக்காக இலங்கை அரசாங்கம் 6000 காவல்துறையினரைப் பணியில் அமர்த்தியுள்ளது. எனினும், இந்தியப் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்புப் பணியில் கறுப்புப் பூனைகள் எனப்படும் இந்தியாவின் மிக முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கொமாண்டோக்களே ஈடுபடுத்தப்படுவர்.
மோடி இலங்கையில் தங்கியிருக்கும் போதும், அவர் பயணம் செய்யும் இடங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்கனவே கறுப்புப்பூனை கொமாண்டோக்களின் அணியொன்று கொழும்பு வந்துள்ளது.

அத்துடன், மோடி பயணம் செய்யும் மற்றும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் நான்கு எம்.ஐ.17 உலங்குவானூர்திகளும் ஏற்கனவே கொழும்பு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]