மோடியின் உரையை விமர்சனம் செய்ய உதய கம்மன்பிலவுக்கு என்ன தகுதியுள்ளது?

மோடியை உரையை விமர்சனம் செய்ய உதய கம்மன்பிலவுக்கு என்ன தகுதியுள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் ஊவாமாக அமைச்சருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்திய வம்சாவளி மக்களுக்கு மிகப்பெரிய கௌரவம் அளித்ததுடன், சர்வதே சரீதியில் மலையக மக்களுக்கு அங்கிராத்தையும் பெற்றுகொடுத்தார்.

மோடி உலகத்திலேயே புகழ் பெற்ற தலைவர்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ஒப்பிடுகையில் அவரைவிட மோடி கடந்தவருட காலங்களில் முதலிடத்தை பெற்றிருந்தார். அப்படிப்பட்ட ஒருதலைவர் மலையகத்திற்கு வருகைதந்தமை மலையக மக்களுக்குமட்டுமின்றி இலங்கைக்கே பெருமைக்குரிய ஒருவிடயமாகும். அவருடையவருகை மற்றும் உரையை விமர்சிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில போன்ற அரசியல் வாதிகளுக்கு எவ்விததகுதியும் கிடையாது.

கம்மன்பிலவை பொறுத்தவரையில் மலையகமக்களுக்கு இது வரையில் எவ்வித மேம்பாட்டு வேலைகளும் மேற்கொண்டது கிடையாது. உதாரணமாக அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு மூடை சீமெந்து கூட மலையக அபிவிருத்தி மேம்பாட்டிற்கு வழங்கியது கிடையாது. வெறுமனே வெயில் காலங்களில் சுற்றுலாப் பயணியாக மலையகத்திற்கு வந்துபோகும் இவர்களால் மலையகத்திற்கு வருகைதந்த மோடிலைவிமர்சிப்பதற்கு எவ்விததகுதியும் கிடையாது.

மோடியின் உரையை

மோடி மலையகத்திற்கு விஜயம் செய்தமை அவரது பெருந்தன்மையையும் இந்தியவம்சாவளி மக்கள் மீது வைத்திருக்கும் அக்கறையையுமே வெளிக்காட்டுகின்றது.

இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் பத்தாயிரம் வீடுகள் வேண்டுக்கோளிற்கிணங்கமலையகத்திற்குநான்காயிரம் வீடுகள் இந்திய அரசினால் ஏற்கனவேவழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது இருபத்தைந்தாயிரம் வீடுகள் கேட்டுக்கொண்டதையடுத்து அதன் அடிப்படையில் பத்தாயிரம் வீடுகளை வழங்குவதாக பிரதமர் மோடியினால் உறுதிமொழியளிக்கப்பட்டுள்ளது.

இப்பத்தாயிரம் வீடுகளை இந்தியாவில் வழங்கியிருந்தால் அவரது வாக்குபலம் அதிகரித்திருக்கும். அவ்வாறு சுயநலமின்றி மலையக மக்களின் நன்மைக ருதியே இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருவதன் மூலம் அவரது நல்ல பண்பும் பெருந்தன்மையும் எடுத்துக்காட்டுகின்றது. அதனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் அவரது மலையக விஜயம் மற்றும் மலையகமக்களிடம் ஆற்றிய உரையினை எவரேனும் விமர்சிப்பதற்கு இடமளிக்காது என்றும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]