மோடிக்கு இலங்கையில் என்ன அதிகாரம் உள்ளது?

மோடிக்கு இலங்கையில் என்ன அதிகாரம் உள்ளது? என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.

பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் வலியுறுத்தியதாவது,

சர்வதேச ஐ.நா வெசாக் உற்வசத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெசாக் உற்வசத்தின் பின்னர் மலையகப் பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.

டிக்கோயா மைதானத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, மலையகத்திற்கு மேலும் 10,000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதாகவும், தென்னிலங்கையில் தற்போது செயற்படுகின்ற இந்திய இலவச அம்பியூலன்ஸ் சேவையை நாடு முழுவதிலும் விஸ்தரிப்பதாகவும் கூறியிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திர வர்த்தகம் ஏற்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் என்ன? எட்கா ஒப்பந்தத்தை விரைவில் செய்துகொள்ள வேண்டும் என்பதையே முறைமுகமாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் இந்த நாட்டு பிரதமரா? இல்லை ஜனாதிபதியா?. அவருக்கு இலங்கைத் தொடர்பில் கருத்து வெளியிட என்ன அதிகாரம் உள்ளது. என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]