மோசமான வசூலில் ஷாருக்கானின் Zero – வசூல் விபரங்கள் இதோ!..

நடிகர் ஷாருக்கானுக்கு மொழிகள் தாண்டி ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவரின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் Zero.

இந்த படத்தில் அவர் குள்ளராக நடித்துள்ளார். அவருடன் அனுஷ்கா சர்மா, கத்ரீனா கைஃப் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனந்த் எல் ராய் படத்தை இயக்கியுள்ளார்.

படத்தை ஹிந்தி பிரபலங்கள் பலர் பாராட்டியிருந்தாலும் ஷாருக்கானின் தோல்வி பட லிஸ்டில் ஒன்றாக இது சேர்ந்து விட்டது என்றே கூறவேண்டும்.

ரூ 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இப்படம் இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் ரூ 59.07 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது.

வெள்ளி – ரூ 20.14 கோடி

சனி – ரூ 18.22 கோடி

ஞாயிறு – ரூ 20.71 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]