மோசடியில் ஈடுபட்ட 25 வர்த்தகர்கள் சிக்கினர்

பொருட்களின் அளவைகளில் மோசடி மேற்கொள்ளும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்காக இரத்தினபுரி நகரத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறு வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காக நேற்று இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

இரத்தினபுரி மாவட்ட அளவீட்டு தரப்பிரிவு மற்றும் சேவைப்பிரிவின் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்த சிறுவர்த்தகர்கள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், மோசடி அளவீட்டு கருவிகளையும் இதன்போது அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]