மோசடிகாரர்களுக்கு தண்டனை கொடுக்க காலதாமதம் – அமைச்சர் சரத் பொன்சேகா 

மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் வீணே காலத்தை செலவழித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சுமத்துகிறார்.
மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்குவதில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
களணி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இந்த வியடத்தை குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]