முகப்பு News Local News மொனராகலையில் விபத்து – 03 பேர் பலி

மொனராகலையில் விபத்து – 03 பேர் பலி

மொனராகலை வெல்லவாய வீதியில் கும்புக்கன அத்தரமத்திய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.
பாரவூர்த்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
சம்பவத்தில் பலியானவர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டி சாரதியான 22 வயதுடைய இளைஞரும், பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த 19 வயது யுவதி மற்றும் 8 வயதான சிறுவனுமே விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com