மொட்டுச் சின்ன வேட்பாளார் கைது

வேட்பாளார் கைது மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளார் மற்றும் மேலும் ஒருவர் வவுனியா நெலுவன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தொன்றின் போது ஏற்பட்ட கைகலப்பிற்காகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக நெலுவன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளாரால் நெலுவன்குளம் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தொன்றின் போது, விபத்துக்குள்ளனவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

​கைகலப்பில் ஈடுபட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து இருவரும் நெலுவன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]