மொடல் அழகி மரணம் தொடர்பில் நடிகர் விக்ரம் கைது

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மொடல் அழகியுமான சோனிகா சவுகான், உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பெங்காலி நடிகர் விக்ரம் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், சோனிகா சவுகான் மரணமடைந்தார். விக்ரம் சாட்டர்ஜி காயங்களுடன் உயிர் பிழைத்துக்கொண்டார்.

அப்போது விக்ரம் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை என காவல்துறையினரிடம் தெரிவித்தார். ஆனால் சோனிகா பெற்றோர் விக்ரம் குடித்துவிட்டு காரை ஓட்டி தங்கள் மகளை கொன்றுவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்து நடந்த இரவு விக்ரமும், சோனிகாவும் கிளப்புக்கு சென்றுள்ளனர். அங்கு விகரம் குடித்த போது புகைப்படம் மற்றும் விடியோ கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் விக்ரம் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது என வழக்கு செய்தனர்.

மேலும் சோனிகா உயிரிழக்க விக்ரம்தான் காரணம் என நேற்று இரவு விக்ரமை காவல்துறையினர் கைது செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]