மைத்திரி – ரணிலின் இரு துருவ கொள்கைகளால் பயன் இல்லை!

மைத்திரி – ரணிலின் இரு துருவ கொள்கைகளால் பயன் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“நாட்டின் பொருளாதாரம் அடியோடு சிதைக்கப்பட்டுவிட்டது. நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு புதிய அரசமைப்பைக் கொண்டுவர முயற்சி நடக்கிறது. அரச சொத்துகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவருகின்றன. நாட்டில் இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும்போது இந்தியாவிலிருந்து வேலைக்கு ஆட்களைத் தருவிக்கப் பார்க்கிறார்கள்.

நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டெடுத்த வீரர்களும் வீராங்கனைகளும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். நாட்டில் நிறைய தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள பொதுமக்கள் திணறுகிறார்கள். உண்மையான தலைவர் யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.

அமைச்சரவைப் பேச்சாளர்களாக மூன்று பேர் உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் நோக்கங்களும் வெவ்வேறாக உள்ளன. நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகமொன்றை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது” – என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]